Puttalam Online
regional-news

ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலய வைரவிழா – 02 ஆம் நாள் நிகழ்வுகள்

  • 11 February 2020
  • 196 views

– க.மகாதேவன்-உடப்பு-
ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலயத்தின் வைரவிழா 2 ஆம் நாள் நிகழ்வுகள் இன்று (11/02) செவ்வாய்க்கிழமை மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

இதன் போது சப்ரகமுவ பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி. தேவகுமாரி சுந்தரராஜன் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் புத்தளம் மாவட்ட சிரேஷ்டபுள்ளி விபரவியலாளர் திரு. எஸ்.தனபாலசிங்கம் அவர்களும் கல்வி அதிகாரிகள்  ஆசிரிய ஆலோசர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தாா்கள்.

இதன் போது தினகரன் பத்திரிகையில் வெளியான ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலய சிறப்பிதழ் ஒன்றும் அதிபரினால் வழங்கி வைக்கப்பட்டதுடன் பத்திரிகைகள் பெற்றோருக்கும் வழங்கப்பட்டது.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All