Puttalam Online
regional-news

இஸ்லாமிய தின நிகழ்வுகள்…

  • 12 February 2020
  • 304 views

ரூஸி சனூன் புத்தளம்
ஸ்ரீலங்கா முஸ்லீம் ஹேண்ட்ஸ் நிறுவனத்தினால் நிர்வகிக்கப்படும் எக்ஸலன்ஸ் சர்வதேச ஆங்கில மொழி பாடசாலையின் இஸ்லாமிய தின நிகழ்வுகள் அண்மையில் (06) பாடசாலையின் பிரதான கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் எச். அஜ்மல்  தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அதிதிகளாக புத்தளம் வலய திட்டமிடல் பிரிவுக்கான பிரதி கல்வி பணிப்பாளர் அலி ஜின்னாஹ், ஸ்ரீலங்கா முஸ்லிம் ஹேண்ட்ஸ்  நிறுவன பணிப்பாளர் எம். மிஹ்லார் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வின் போது போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All