Puttalam Online
regional-news

அகில இலங்கை சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம்

  • 12 February 2020
  • 487 views

ரூஸி சனூன் புத்தளம் 
புத்தளம் தேத்தாப்பளை மாம்புரியில் வசித்து வரும் பாவிலு ஜெனட்ராஜ் அகில இலங்கை சமாதான நீதவானாக புத்தளம் மாவட்ட மேலதிக மாவட்ட நீதவான் லகிரு என். சில்வா முன்னிலையில் 30 ஆம் திகதி வியாழக்கிழமை சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

மன்னார் புதுக்கமத்தை பிறப்பிடமாகக் கொண்ட இவர் தனது ஆரம்பக் கல்வியை புதுக்கமம் அரசினர் தமிழ் கலவன் வித்தியாலத்திலும்,  உயர் கல்வியை மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியிலும் கற்றுள்ளார்.

இவர் 2007 ஆம் ஆண்டு இலங்கை ஆசிரியர் சேவையில் ஆங்கில ஆசிரியராக நியமனம் பெற்று நுவரெலியா பூண்டுலோயா தமிழ் மகா வித்தியாலயத்திலும், புத்தளம் திகழி முஸ்லிம் மகா வித்தியாலயத்திலும் ஆசிரியர் பணியை மேற்கொண்டார்.

2016 ம் ஆண்டு இறுதி பகுதியிலிருந்து புத்தளம் நாவற்காடு ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றி வருகின்றார்.

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All