Puttalam Online
regional-news

சுதந்திர தினத்தில் குவைத் வைத்தியசாலை வீதியில் நிழல் தரும் மரங்கள் நாட்டி வைக்கும் நிகழ்வு

  • 12 February 2020
  • 216 views

ரூஸி சனூன் புத்தளம் 
 
இலங்கையின் 72 வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு புத்தளம் குவைத் வைத்தியசாலை வீதியில் நிழல் தரும் மரங்கள் நாட்டி வைக்கப்பட்டுள்ளன.

புத்தளம் நகர சபையும்,  இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி புத்தளம் கிளையின் தேச விவகார பகுதியின் இயற்கை வளங்களை பாதுகாக்கும் பிரிவான ரம்ய லங்கா அமைப்பும் இணைந்து இந்த மர நடுகை நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தன.

“வளரும் நகரம் படரும் பசுமை” எனும் தொனிப்பொருளில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அவர்களின் எண்ணக்கருவில் உதயமான இந்த மர நடுகை நிகழ்வில் மருத, வேம்பு, எஹல போன்ற 30 நிழல் தரும் மரங்கள் நாட்டி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் புத்தளம் நகராதிபதி கே.ஏ. பாயிஸ், புத்தளம் பிரதேச செயலாளர் சஞ்சீவனி ஹேரத், புத்தளம் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்று பொறியியளாலர் அருள் தாஸன், இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.எச்.எம்.உஸைர் (இஸ்லாஹி) உள்ளிட்ட நகர சபை உறுப்பினர்கள்,  ரம்ய லங்கா அமைப்பின் உறுப்பினர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All