Puttalam Online
regional-news

கத்தாரில் புத்தளம் சஹிரியன்ஸ்களுக்கான உள்ளக உதைபந்தாட்ட தொடர்

  • 14 February 2020
  • 202 views

(புகைப்பட உதவி – சிப்ரீன்)

கத்தாரில் வசிக்கும் புத்தளம் சஹிரியன்ஸ்களுக்கான உள்ளக உதைபந்தாட்ட (புட்சால்) தொடர் அண்மையில் கேம்பிரிஜ் பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.

புத்தளம் ஸாஹிரா கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் கத்தார் கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட அணிக்கு ஏழு பேர் கொண்ட இத்தொடரில் ‘2011/2012 O/L’ அணியினர் சம்பியனாக முடி சூடிக்கொண்டனர்.

இரண்டாம் இடத்தை ‘Z14’ அணியினரும், மூன்றாம் இடத்தினை ‘Z Dudes’ அணியினரும் தனதாக்கி கொண்டனர்.

பழைய மாணவர் சங்கத்தில் பதிவு செய்துகொண்ட 11 அணிகள் 4 குழுவாக பிரிக்கப்பட்டு குழு போட்டிகள் நடைபெற்றது. அதில் தெரிவு செய்யப்பட்ட அணிகள் விலகல் அடிப்படையில் விளையாடி காலிறுதி, அறையுறுதி போட்டிகளுக்கு தெரிவாகியது.

முதலாவது அரையிறுதியில் Z Dudus அணியினை Z14 அணியினரும், இரண்டாவது அரையிறுதியில் Z 04 அணியினை ‘2011/2012 O/L’ அணியினரும் வெற்றிகொள்ள இறுதி போட்டியில் Z14 மற்றும் ‘2011/2012 O/L’ அணியினர் பலப்பரீட்சை நடத்தினர். இறுதியில் 2:1 எனும் கோல் விகிதத்தில் ‘2011/2012 O/L’ மகுடத்தை சூடி கொண்டனர். தொடரில் அதிக கோல் அடித்தவராக சனூஸ் தெரிவு செய்யப்பட்டார்.

தொடரின் நடுவில் பார்வையாளர்களுக்கு மத்தியிலான தண்ட உதை (பெனால்டி) ஒழுங்கு செய்யப்பட்டமை நகைச்சுவை மற்றும் மகிழ்ச்சிகரமான அம்சமாக தெரிவிக்கப்பட்டது.

சம்பியன், இரண்டாம், மூன்றாம் கிண்ணங்களையும், வீரர்களுக்கான பதக்கங்களையும் புத்தளத்தின் மூத்த சகோதரர்கள் வழங்கி வைத்தனர். புத்தளம் ஸாஹிரா கல்லூரி பழைய மாணவர் சங்க கத்தார் கிளை உருவானதன் முதல் நிகழ்வாக ஒழுங்கு செய்யப்பட்ட இத்தொடர் மிகுந்த வரவேற்பை பெற்றவேளை மேலும் இது போன்ற நிகழ்வுகளை பழைய மாணவர்களுக்கு மத்தியில் நடாத்த வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இத்தொடரில் ஆரம்பம் தொட்டு இறுதி வரை சகோ. அஸ்லி, சகோ. ஷகீல் ஆகியோர் நடுவர்களாக, ஏற்பாட்டு குழுவினர்களாக அயராது பாடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All