Puttalam Online
regional-news

கிராமிய வைத்தியசாலைக்கு பிளாஸ்டிக் கதிரைகள் அன்பளிப்பு

  • 14 February 2020
  • 360 views

(ரூஸி சனூன் புத்தளம்)
 .
புத்தளம் மன்னார் வீதி நான்காம் மைல் கல் வேப்பமடு பிரதேசத்தில் அமைந்துள்ள தாய் சேய் சிகிச்சை உள்ளிட்ட வைத்திய சேவைகள் இடம்பெற்று வருகின்ற கிராமிய வைத்தியசாலைக்கு வருகை தரும் நோயாளர்களின் நலன் கருதி பிளாஸ்டிக் கதிரைகள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன.
 .
புத்தளம் நகரின்  சமூக சேவையாளரும், தொழிலதிபருமான எல்.சங்கர் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து அண்மையில் வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி டாக்டர் சிவ சொரூபனிடம்  இந்த பிளாஸ்டிக் கதிரைகளை கையளித்துள்ளனர்.
 .
இதன்போது சுமார் இருபது கதிரைகள் அன்பளிப்பு செய்யப்பட்டதாக தெரிவித்த எல்.சங்கர், எதிர்காலத்தில் குறித்த இந்த வைத்தியசாலைக்கு தேவைப்படும் அத்தியாவசிய குறைபாடுகளையும் தனது நண்பர்களுடன் இணைந்து தீர்த்து வைக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
 .
WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All