Puttalam Online
regional-news

பல்கலைகழக பகிடிவதை – தில்லையடி தனபாக்கியம் அற நிதியம் அறிக்கை

  • 18 February 2020
  • 174 views

ரூஸி சனூன் புத்தளம் 
பல்கலைக்கழகங்களில் பகிடிவதை என்பதனை எப்போதோ கடுமையான தண்டனைகளை கொடுத்து தடை செய்திருக்க வேண்டும். ஆனால் இன்று வரை இதில் மென்போக்கே கடைப்பிடிக்க படுகின்றது என புத்தளம் தில்லையடி தனபாக்கியம் அற நிதியத்தின் ஸ்தாபக தலைவர் எஸ். பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பல்கலைகழகங்களில் பகிடிவதையில் ஈடுபடுபவர்கள் பாமர மக்களாகவோ அல்லது கல்வியறிவு அற்றவர்களாகவோ இருந்தால் அவர்களிடையே பிரச்சாரம் செய்வதாவது விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கலாம்.

ஆனால் இவர்கள் சுமார் 14 வருடங்கள் கல்வி கற்று உயர் பெறுபேறுகளை பெற்றவர்கள்.ஒரு சிலரின் வக்கிர புத்தியால் பல மாணவர்கள் பாதிக்கப்பட்டு மன சஞ்சலத்துக்கு உள்ளாகின்றனர்.

இவ்வாறானவர்கள் கல்வியின் தாத்பரியத்தை உணராமல் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று உயர் பதவிகளில் அமரும் போது, குறிப்பாக  அரச அதிகாரியாக வருவார்களேயானால் இவர்களிடம் மனித பண்பு, காருண்யம் போன்றவற்றை எவ்வாறு எதிர்பார்க்க முடியும். அதிலும் பாதிக்கப்பட போவது பொதுமக்களே.

எனவே இவர்களுக்கு ஆரம்ப காலத்தில் இருந்தது போன்று பிரம்படி, கசையடி போன்றவற்றை நீதிமன்ற தீர்ப்பின் ஊடாக பெற்று தண்டனை வழங்கப்படவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All