Puttalam Online
regional-news

40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான சிநேகபூர்வமான கால்பந்தாட்ட போட்டி சமநிலையில் நிறைவு

  • 24 February 2020
  • 421 views

(ரூஸி சனூன் புத்தளம்) 
.
புத்தளம் வெட்டரன்ஸ் கால்பந்தாட்ட அணிக்கும், கொழும்பு வெட்டரன்ஸ் கால்பந்தாட்ட அணிக்குமிடையில் நடைபெற்ற 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான சிநேகபூர்வமான கால்பந்தாட்ட போட்டியில் இரு அணிகளும் தலா ஒவ்வொரு கோலினை பெற்றதால் போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.
.
இந்த போட்டி ஞாயிற்றுக்கிழமை (23) மாலை புத்தளம் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
.
தத்தமது லீக் அணிகளுக்காக பல்வேறு திறமைகளை வெளிக்காட்டி பல சாதனைகளை நிலை நாட்டிய முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள், பயிற்றுவிப்பாளர்கள் பலரும் இந்த 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான போட்டியில் பங்கேற்றனர்.
.
இடைவேளைக்கு முன்னதாக கொழும்பு வெட்டரன்ஸ் கால்பந்தாட்ட அணிக்கு கிடைக்கபெற்ற பெனால்டி உதையினை அவ் அணி வீரர்கள் கோலாக்கினர்.
.
இடைவேளைக்கு பின்னர் புத்தளம் வெட்டரன்ஸ் கால்பந்தாட்ட அணியின் முன்கள வீரரும், புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரியின் உடற்கல்வி போதனாசிரியருமான எம்.எப்.எம்.ஹுமாயூன் செலுத்திய சிறந்த உதையொன்று கோல் ஆகியதால் நிர்ணயிக்கப்பட்ட ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் தலா ஒவ்வொரு கோல்களை பெற்றுக்கொண்டன.
.
போட்டிக்கு நடுவர்களாக ஏ.ஏ.எம்.கியாஸ், எம்.எம்.சிபான், எம்.ஐ.எம்.அலி ஆகியோர் கடமையாற்றினர்.
.
WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All