Puttalam Online
regional-news

கராத்தே சுற்றுப்போட்டியில் புத்தளம் பிரதேசத்தை சேர்ந்த மாணவர்கள் அபாரம்

  • 25 February 2020
  • 263 views

(ரூஸி சனூன் புத்தளம்)
 .
அகில இலங்கை கராத்தே சம்மேளத்தினால் நடாத்தப்பட்ட தேசிய மட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையிலான குமித்தே மற்றும் காதா கராத்தே சுற்றுப்போட்டியில் புத்தளம் பிரதேசத்தை சேர்ந்த மாணவர்கள் 16 பதக்கங்களை பெற்று சாதனைகளை நிலை நாட்டியுள்ளனர்.
.
கல்வி அமைச்சு மற்றும் விளையாட்டு துறை அமைச்சின் அனுசரணையோடு நடைபெற்ற இந்த போட்டி தொடர் அண்மையில் (16) நீர்கொழும்பு ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே உள்ளக விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
.
“மெய்ஜி ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப் 2020” எனும் இந்த போட்டி தொடரில் புத்தளம் பிரதேச மாணவர்கள் இந்தளவு பதக்கங்களை அள்ளி குவிப்பதற்கு “வங்கண் ஷோடோ கன் கராத்தே தோ” சங்கத்தின் போதனாசிரியர் சிஹான் எம்.பைரூஸ் மாணவர்களுக்கு சிறந்த பயிற்சிகளை வழங்கி இருந்தார்.
.
08 வயதுக்குட்பட்ட காதா கராத்தே போட்டியில் புத்தளம் ஸாஹிரா ஆரம்ப பாடசாலை மாணவன் எம்.எஸ்.எம். சுலைமான் இரண்டாம் இடத்தை பெற்று வெள்ளி பதக்கத்தை பெற்றுள்ளார்.
.
09 வயதுக்குட்பட்ட காதா கராத்தே போட்டியில் புத்தளம் ஸாஹிரா ஆரம்ப பாடசாலை மாணவன் எம்.எச்.அஹ்கன் இரண்டாம் இடத்தை பெற்று வெள்ளி பதக்கத்தை பெற்றுள்ளார்.
.
10 வயதுக்குட்பட்ட காதா கராத்தே போட்டியில் புத்தளம் இக்ரா சர்வதேச ஆங்கில மொழி பாடசாலை மாணவன் எம்.யூ.தாமிர் மூன்றாம் இடத்தை பெற்று வெண்கல பதக்கத்தை பெற்றிருப்பதோடு, குமிதே கராத்தே போட்டியிலும் வெண்கல பதக்கத்தை பெற்றுள்ளார்.
.
10 வயதுக்குட்பட்ட காதா கராத்தே போட்டியில் மதுரங்குளி கடையாமோட்டை சிங்கள பாடசாலை மாணவன் பீ.கே.பிரவீன் மூன்றாம் இடத்தை பெற்று வெண்கல பதக்கத்தை பெற்றுள்ளார்.
.
13 வயதுக்குட்பட்ட காதா மற்றும் குமிதே கராத்தே ஆகிய இரு போட்டிகளிலும் புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரி மாணவன் ஏ.எஸ்.ஏ.ஸைத் அலி மூன்றாம் இடத்தை பெற்று வெண்கல பதக்கங்களை பெற்றுள்ளார்.
.
13 வயதுக்குட்பட்ட குமிதே கராத்தே போட்டியில் புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரி மாணவன் உமர் ஸய்யான் முதலிடம் பெற்று தங்கப்பதக்கத்தையும்,காதா கராத்தே போட்டியில் இரண்டாம் இடம் பெற்று வெள்ளி பதக்கத்தையும் பெற்றுள்ளார்.
.
13 வயதுக்குட்பட்ட குமிதே கராத்தே போட்டியில் புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரி மாணவன் எம்.எச்.முஹம்மது  இரண்டாம் இடம் பெற்று வெள்ளி பதக்கத்தை பெற்றுள்ளார்.
.
20 வயதுக்குட்பட்ட போட்டியில் புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரி மாணவன் ஏ.ஆர்.பஹ்மான் உமர், காதா போட்டியில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கத்தையும், குமிதே போட்டியில் இரண்டாம் இடம் பெற்று வெள்ளி பதக்கத்தையும் பெற்றுள்ளார்.
.
13 வயதுக்குட்பட்ட போட்டியில் மதுரங்குளி சிங்கள பாடசாலை மாணவி சதுணி, காதா போட்டியிலும், குமிதே போட்டியிலும் மூன்றாம் இடம் பெற்று வெண்கல பதக்கங்களை பெற்றுள்ளார்.
.
WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All