Puttalam Online
regional-news

அதிபர் ஏ.ஜே.எம்.இல்ஹாம் பொன்னாடை போர்த்தி, நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிப்பு

  • 27 February 2020
  • 361 views

(ரூஸி சனூன் புத்தளம்) 
 .
புத்தளம் வெட்டாளை அஸன் குத்தூஸ் முஸ்லிம் வித்தியாலயத்தின் அதிபராக கடமை ஏற்றுள்ள ஏ.ஜே.எம்.இல்ஹாம்,ஸாஹிராவின் பழைய மாணவர் அமைப்பான க.பொ.த. சாதாரண தரம்1998 மற்றும் உயர் தரம் 2001 அமைப்பான யூத் விஷன் அமைப்பினரால் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
 .
அதிபர் ஏ.ஜே.எம்.இல்ஹாம் குறித்த இந்த பழைய மாணவர் அமைப்பில் அங்கத்தவர்களில் ஒருவர் மட்டுமல்லாது நிர்வாக குழு உறுப்பினராகவும் கடமையாற்றி வருகின்றார்.
 .
தமது அமைப்பினை சேர்ந்த ஒருவர் அதிபராக பதவி உயர்வு பெற்றுள்ளதை கௌரவிக்கும் பொருட்டே  இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
 .
இந்த கௌரவிப்பு நிகழ்வானது அண்மையில் (25) புத்தளம் போல்ஸ் வீதியில் அமைந்துள்ள தனியார் உணவு விடுதியின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
 .
இந்நிகழ்வில் அதிபர் ஏ.ஜே.எம்.இல்ஹாம் பொன்னாடை போர்த்தி, நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
.
WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All