Puttalam Online
regional-news

சிலாபம் நகரில் தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட மாநாடு

ரூஸி சனூன் புத்தளம் 
.
“மக்களுக்குப் பொறுப்புக் கூறும், மக்கள் சக்தியைக் கட்டியெழுப்பும்” என்ற தொணிப்பொருளில் அமைந்த, தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட மாநாடு, தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் உட்பட மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுர குமார திசாநாயக்க ஆகியோரின் பங்குபற்றுதலுடன் அண்மையில் (25) சிலாபம் நகரில் நடைபெற்றது.
.
இம் மாநாட்டின்போது, எதிர்வரும் பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட வேட்பாளர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டது.
.
புத்தளம் தேர்தல் தொகுதியில் இருந்து, ஆசிரியர் பைசல் (கற்பிட்டி பிரதேச சபை), பொறியியலாளர் ரியாஸ் (புத்தளம் நகர சபை), வங்கி அதிகாரி நிமல் (புத்தளம் பிரதேச சபை) ஆகியோர் பொதுத் தேர்தல் வேட்பாளர்களாக முன்னிறுத்தப்பட்டுள்ளார்கள்.
 .
தமிழ் சிங்களம் இரண்டு மொழிகளில் நடத்தப்பட்ட இம் மாநாட்டில் பொறியியலாளர் ரியாஸ் தமிழ் மொழியில் உரையாற்றினார்.
.
WAK


One thought on “சிலாபம் நகரில் தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட மாநாடு

  1. Mohamed SR Nisthar says:

    பட்ட மரத்தை முட்டுக்கொடுத்து நிற்கவைக்கும் முயற்சியை கைவிட்டு நம் பாதுகாப்புக்கும் , நாட்டின் விருத்திக்கும் நம் பங்களிப்பாக ” மக்கள் சகதியுடன் ஒன்று சேர்வோம்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All