ஆசிரியையின் மரணச் செய்தி கேட்டு அழுகின்ற குரல் இது.
இரங்கல் பா.
இதயம் அழுகிறது.
1998 ல் மட்டும் தான் உம்மிடம் கற்றிருந்தேன்./
இன்று வரை என்னதுவோ
இமை நொடிக்குள் வந்து சென்றீர்.//
அருள் நிறைந்த அல்லாஹ்விடம் ஆத்மா சென்றதனை /
அழைப்பு ஒலி ஓசை கேட்டு /
திடுக்குற்று நின்றுவிட்டேன் /
திகைத்து கண்கள் விரிந்த படி.//
நம்பவில்லை செய்திதனை
நாவினால் இல்லை என்று/
கொண்ட இல்லாள் வசம் கூறி/
இறுதி செய்தி நானறிந்தேன்.//
பள்ளிப் பருவ நினைவு தனை
பசுமையோடு அசை போட்டேன்./
பவித்திரமாய் பல செய்தி
பரிவுடனே வந்து போச்சு//
கசப்பான கணிதத்தை
கனிவுடனே கற்பித்தீர்./
பண்பான புன்னகையுடன்
பாரளந்து நீர் நின்றீர்.//
சமாந்தரக் கோடு வரைவதற்காய்
சாலவே முக்கோண ரூளர் உண்டு/
சங்கடங்கள் இல்லாமல் சங்கையுடன் கூர்கோணம்/
செங்கோண முக்கோணம்
செவிவழி பாடம் தந்தீர்.//
அளவில்லா பயிற்சிகளை ஆசையுடன்
அள்ளி தந்தீர்/
அந்தந்தப் பயிற்சிகளை
அணிதிரட்டி திருத்தம் செய்தீர்//
பெற்றெடுக்கா நற்றாயாய்
பெருமைகள் சேர்திடவே /
பெரும் உபதேசம் கூறி நின்றீர்/
தாயாக வாழ்ந்து சென்றீர்//
கண்ணீருக்குள் உப்பு சுவை மட்டும் தான் உண்டு ஆனாலும் /
பல கதைகள் சொல்லி வரும்
உணர்வுகளை
அள்ளி வரும்//
அதனால்தான் கண்ணீருக்கு பெறுமதி அதிகம் என்பார்/
கண்கலங்க வைத்து விட்டு
கடு கதையாய் சென்றுவிட்டீர்//
இறைப் பாதம் காண வேண்டி
இன்முகம் காட்டி விட்டீர்/
கல்புக்குள் ஒளியேற்றி களங்கரை தீபமானீர்//
கணத்த இதயத்தோடு கால்கள் நகர்கிறது/
உடல் மட்டும் வீடு நோக்க/
மையத்து பள்ளி தனை விட்டு விலகிச் செல்லகிறது//
மலர்ப்படுக்கை தங்களின் மக்பராவை சுற்றி மட்டும் என்னுள்ளம் தள்ளாடி நிற்கிறது/ பிரார்த்தனைகள் செய்கிறது//
மண்டியிட்டு மன்றாட்டம் மாண்புடனே செய்கிறது //
மறுமையின் வாழ்வதற்காய்/
மாசில்லா உம் உள்ளம்/
உயர்ந்த சுவனம் அடைய வேண்டி./
உயர்கிறது இரு கரங்கள்/
உவப்பான இறைவனிடம்//
உருவகங்கள் ஏதுமில்லா சுவனத்து பூஞ்சோலையிலே/
உறு வரவை எதிர்பார்த்து
உத்தமர்கள் காத்து நிற்க/
ஊர்த்திரண்டு வெள்ளி நாளில்
உம்மைத் தொடர்ந்து நாம் வருவோம் பின்னாளில்
இதயம் அழுகிறது//
மாண்புடன் மாணவன்
ஃபஸீல்.
(ஆசிரியர் ஸாஹிரா கல்லூரி, புத்தளம்)
புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையின் கணிதம் கற்பித்த முந்நாள் ஆசிரியையும் தற்பொழுது புத்தளம் வேப்பமடு பாடசாலையின் ஆசிரியையுமான ஸபீனத் பேகம் 12.03.2020 அன்று காலமானார். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் 13.03.2020 அன்று காலை 9.00 மணிக்கு இடம்பெற்றது.