Puttalam Online
education

வீட்டுப் பாடசாலை…! ஒரு நடைமுறை முன்மொழிவு…!!

  • 5 April 2020
  • 193 views

வீட்டுப் பாடசாலை…
ஒரு நடைமுறை முன்மொழிவு…!
——————–

என்று முடியும் எனத் தெரியாது நீண்டு செல்லும் இந்த விடுமுறை காலம், மாணவர்கள் கல்வி வாழ்வில்
பெரியதோர் தாக்கத்தை செலுத்தப்போகிறது…

குறிப்பாக சிறுபராய பிள்ளைகளின் தொடர்ச்சியான கல்வித்தேவையில் விழும் இந்த இடைவெளி,
மீண்டும் பாடசாலை ஆரம்பிக்கும் போது அவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பாடசாலைக்கும் பெரும் சவாலாக அமையப்போகிறது…

அதேவேளை வீட்டில் அவ்வப்போது நாம் போடும் “படி.. படி..” எனும் சத்தம்,
மாணவர்களுக்கு நச்சரிப்பாகவும், அவர்களின் விளையாட்டு மற்றும் சுதந்திர உணர்வுக்கு எதிர்ப்பான எரிச்சலாகவும் உணரப்படுமேயன்றி…
உளரீதியான ஈடுபாட்டை வழங்காது…

அந்தவகையில், நான் முயற்சித்த ஒரு முன்மொழிவை,
இவ்விடையத்தில் பலருக்கும் பிரயோசனமளிக்கக்கூடும் என்றவகையில் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்…!

*

மறுஅறிவித்தல்வரை,
தற்காலிகமாக பாடசாலையை வீட்டில் ஆரம்பிக்கிறோம் என்ற தகவலை பிள்ளைகளுக்கு உற்சாகமாக வழங்குதல்..!

# பாடசாலை சீருடையோடு, புத்தகங்களோடு, தண்ணீர்போத்தலோடு சரியாக வீட்டு வகுப்பறைக்கு காலை 7.30 க்கு சமூகமளிக்க வேண்டும்.
# தேசியகீதம்/பாடசாலை கீதம் இடம்பெறும்..
# காலைக்கூட்டம் அதேபோல் நடைபெறும்…
# Attendance பதியப்படும்..
# பாடவேளைகள் school time table ற்கு ஏற்ப அதேபோன்று நடைபெறும்…
# interval வழங்கப்படும்…
# உணவுக்கான நேரம் வழங்கப்படும்.
# அவர் அவர் Grade ற்கு ஏற்ப அதே நேரத்தில் துஆவுடன் பாடசாலை விடப்படும்.

குறிப்பு :
1. ஒரு மாலை நேர அமர்வை ஏற்பாடு செய்து, இந்த தகவல்களை வழங்கி பிள்ளைகளுக்கு ஒரு மனோநிலை சமைப்பு நிகழவேண்டும்.
அடுத்த நாள் பாடசாலை ஆரம்பிக்கப்பட வேண்டும்.
2. பெற்றோர் அல்லது வீட்டின் மூத்த பிள்ளைகளே இந்த project இல் ஆசிரியர்கள். ( ஒரு மானசீக முயற்சியும், பொறுமையும் ஆரம்பத்தில் தேவைப்படும் )
3. கற்பித்தல் சிரமம் உள்ளவர்கள் ஆசிரியர்களின் உதவியை whatsapp மூலம் பெற்றுக்கொள்ள முயற்சிக்கலாம். அல்லது குறைந்தபட்சம் self learning நோக்கிய ஊக்கப்படுத்தலாக இதனை மாற்றிக்கொள்ளலாம்.
4. உங்கள் பிள்ளைகளின் உற்சாகமான ஈடுபாட்டை நிச்சயம் நீங்கள் காணக்கூடியதாக இருக்கும்.

வீட்டை விடச்சிறந்த பாடசாலை இல்லை…
தாய் தந்தையை விடச்சிறந்த ஆசிரியம் இல்லை…

நடைமுறை சாத்தியமானது…
இன்ஷா அல்லாஹ், முயற்சித்துப் பாருங்கள்…!


புத்தளம் மரிக்கார்
04-04-2020

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

POEM – A puzzling game

  • Tuesday,26 May 2020

POEM- Diabetes

  • Saturday,23 May 2020

POEM – The nature’s smile

  • Monday,18 May 2020
சுவடிக்கூடம்View All