Puttalam Online
regional-news

நிவாரணப் பணியில் PYRAMID இன் உதவிக்கரம்

  • 5 April 2020
  • 483 views

பரவிவரும் COVID-19 வைரஸ் மூலம் எமது நாட்டில் தொடர் அமுலில் உள்ள ஊரடங்குச் சட்ட நடவடிக்கையில் எமது ஊரும் விதிவிலக்கல்ல. இதனால் நாட்கூலியினை நம்பி தன் வாழ்வாதாரத்தை நடத்தும் எம் சக நண்பர்களின் குடும்பங்கள் படும் இன்னல்களை ஓரளவேனும் துடைத்தெறிய எமது PYRAMID அமைப்பானது அவர்களுக்கு கரம் கொடுக்கும் வண்ணம் உலருணவு பொதிகளை வழங்கும் முகமாக உடன் வேலைத்திட்டத்தை முன்னெடுத்தது.

இதன் போது எமது PYRAMIDஅமைப்பின் அங்கத்துவர்களும் எம் சக நண்பர்களாகிய 2007 O/L, 2010 A/L ஸாஹிராவில் கல்வி கற்ற உள்நாட்டில் மற்றும் வெளிநாட்டில் தொழில் புரியும் பழைய மாணவர்கள் மூலம் அண்ணளவாக 55,000 ரூபாய் நிதி சேகரிக்கப்பட்டு சுமார் 1,500 ரூபாய் பெறுமதியான உலர் உணவு பொதிகள் தயாரிக்கப்பட்டன. இதன் மூலம் 40 குடும்பங்களுக்கு COMMITTEE அங்கத்தவர்கள் மூலம் உலர் உணவு பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

இந்த உயரிய வேலைத்திட்டத்துக்கு நிதியுதவி வழங்கிய நண்பர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியினை PYRAMID அமைப்பின் சார்பாக தெரிவித்துக் கொள்கின்றோம்.

மேலும் உதவிகளை செய்ய விரும்புவோர் PYRAMID அமைப்பின் COMMITTEE அங்கத்தவர்களை தொடர்பு கொள்ளவும்.

 

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
சுவடிக்கூடம்View All