Puttalam Online
regional-news

அரசாங்கத்தின் நிதி உதவி வழக்கும் நிகழ்வுகள்…

  • 7 April 2020
  • 265 views

ரூஸி சனூன் புத்தளம் 
புத்தளத்தின் தொடரான பொலிஸ் ஊரடங்கு சட்டத்தினால் பாதிக்கப்பட்டு மிகவும் அவதிக்குள்ளாக்கப்பட்டுள்ள வயோதிபர்கள், விசேட தேவையுடையவர்கள் மற்றும் கடுமையாக சுகவீனமுற்றவர்களுக்கான அரசாங்கத்தின் நிதி உதவி வழக்கும் நிகழ்வுகள் செவ்வாய்க்கிழமை (07) காலை புத்தளம் நகரின் கிராம சேவையாளர் பிரிவுகளில் இடம்பெற்றன.

கிராம சேவையாளர்கள், குறித்த இந்த பிரிவினர்கள் வதியும் வீடுகளுக்கு அவர்களை நேரடியாக தேடி சென்று உதவி தொகையினை கையளித்தனர்.

வயோதிபர்கள் மற்றும் வயோதிபர்களாக இனங்காணப்பட்டு இது வரை பதிவு செய்யப்படாதவர்கள், விசேட தேவையுடையவர்கள் மற்றும் விசேட தேவையுடையவர்கள் என இனங்காணப்பட்டுள்ளவர்கள், சிறுநீரக, இருதய நோய் போன்ற கடுமையாக சுகவீனமுற்றவர்களுக்காக இதன்போது கிராம சேவையாளர்களினால் தலா 5000 ரூபா நிதி உதவி வழங்கி வைக்கப்பட்டது.

இதேவேளை 5000 ரூபா நிதி உதவி வழங்கப்படுவதாக கேள்வியுற்ற பொதுமக்கள், அரசினால் வசதி அற்றவர்களுக்காக வழங்கப்படவுள்ள 5000 ரூபா நிதியே கிராம சேவையாளர்களினால் வழங்கப்படுவதாக எண்ணி வீடுகளில் இருந்து வெளியேறி கிராம சேவையாளர் காரியாலயம் செல்ல துவங்கினர். எனினும் அவர்களுக்கு சரியான தகவல்கள் கிடக்கப்பெற்றதும் உடனடியாகவே வீடுகளுக்கு திரும்பி சென்றனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

POEM – A puzzling game

  • Tuesday,26 May 2020

POEM- Diabetes

  • Saturday,23 May 2020

POEM – The nature’s smile

  • Monday,18 May 2020
சுவடிக்கூடம்View All