Puttalam Online
current

புத்தளம் சுகாதாரத் துறையினருக்கு ரம்ய லங்கா உதவிக் கரம் நீட்டியது

  • 8 April 2020
  • 675 views

இலங்கை நாடு எதிர்கொண்டுள்ள COVID-19 கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து  நாட்டை மீட்டெடுக்க அருஞ்சேவை புரிந்துவரும் வைத்தியர்கள் மற்றும் சுகாதார சேவை உத்தியோகத்தர்களுக்கான பாதுகாப்பு ஆடைகளை (Personal Protective Kits – PPE)  இலங்கை  ஜமாஅத்தே  இஸ்லாமியின் தேசியரீதியில் இயங்கிவரும் தொண்டு நிறுவனமான ரம்ய லங்கா நாடளாவிய ரீதியில் விநியோகித்துள்ளது. சுமார் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இந்த ஆடைகள் நாடளாவிய ரீதியில்  அமைந்துள்ள வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்களுக்கும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த வகையில் கொரோனா தொற்று அதிகளவில் காணப்படும் புத்தளம் மாவட்டத்தில் புத்தளம் தள வைத்தியசாலை,  சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலை மற்றும் புத்தளம் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் ஆகியவற்றில் பணியாற்றும் வைத்தியர்கள் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்களின் பயன்பாட்டுக்காக ஒரு தொகை  பாதுகாப்பு ஆடைகள் 2020.04.06 ஆந் திகதி வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் புத்தளம் தள வைத்தியசாலை மருத்துவ அத்தியட்சகர் சுமித் அத்தனாயக்க மற்றும் புத்தளம் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஷந்ரு பர்ணாந்து ஆகியோருடன் ரம்யா லங்கா  நிறுவன செயற்திட்ட உறுப்பினர்களான ஓய்வு பெற்ற கிராம சேவை நிர்வாக அதிகாரி சப்ரி மற்றும் ஆசியர் நபீல் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் புத்தளம் தள வைத்தியசாலை மருத்துவ அத்தியட்சகர் சுமித் அத்தனாயக்க  கருத்து தெரிவிக்கையில்,  கொரோனா  நோயாளிகள் புத்தளம் பிரதேசத்தில் அதிகளவில் காணப்படுவதால் எமது வைத்தியசாலை வளப் பற்றாக்குறை போன்ற பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ள நிலையில்  ரம்ய லங்கா நிறுவனத்தினால் வழங்கப்பட்ட இந்த உதவி மிகவும் பெறுமதியானதுடன் பாராட்டத்தக்கது எனக் கூறினார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
சுவடிக்கூடம்View All