Puttalam Online
star-person

நினைவில் நிலைத்துள்ள முன்னோர்கள் – நீதியரசர் அக்பர்

  • 6 May 2020
  • 213 views

01. நீதியரசர் அக்பர்
இவரின் தாயகம் கற்பிட்டி நகரமாகும். இலங்கை உயர் நீதிமன்றத்தின் முதலாவது முஸ்லிம் நீதியரசராக பதவி வகித்து ‘ஜஸ்டிஸ் அக்பர்’ என்று புகழ் பெற்றவராவர். மலாயர் சமூகத்தில் தோன்றிய இவர் சிறந்த கல்விமானும் , சமூகத்தொண்டரும் , சட்ட , பொறியியல் வல்லுநருமாவார். ‘முஹம்மதியர்’ என்ற சொல்லுக்குப் பதிலாக ‘முஸ்லிம்கள்’ என்ற சொல்லை அரசு ஆவணங்களில் பதிவு செய்ய வேண்டுமென கோரி வெற்றிக் கண்டவர். பேராதனை இலங்கைப் பல்கலைக்கழகத்தின் தோற்றத்திற்க்குப் பெரிதும் உழைத்தவர்.

முஸ்லிம்களின் சொத்துரிமை , ‘வக்பு’ ஆகியன சம்பந்தமான புதிய சட்டக் கோவைகளை ஆக்குவதில் இவரின் பங்களிப்பு முக்கியமானதாகும். இவர் சிறந்த மத பக்தியுடையவராகத் திகழ்ந்தார். பேராதனை பல்கலைக் கழக அக்பர் மண்டபம் , வத்தளை ‘அக்பர் டவுன்’ என்பன இவர்களின் ஞாபகச் சின்னங்களில் சிலவாகும்.

(புத்தளம் வரலாறும் மரபுகளும் – ஏ. என்.எம். ஷாஜஹான் )

     


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All