Puttalam Online
funeral

மரண அறிவித்தல் – புத்தளம் ரபீக் குவைத்தில் காலமானார்

  • 17 May 2020
  • 915 views

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

புத்தளத்தைச் சேர்ந்த முஹம்மது ரபீக் அவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை குவைத்தில் காலமானார்.

யா அல்லாஹ் அன்னாரது பாவங்களை மன்னித்து, உயர்வான சுவனத்தை வழங்கிடுவாயாக..! அன்னாரின் பிரிவால் துயரும் மனைவி, பிள்ளைகள் மற்றும் உறவினர்களுக்கு மன ஆறுதலையும் கொடுப்பாயாக..!!

————————————————————————————–

எங்கள் அருமை தந்தையே!

இப்போது நீங்கள் எங்களோடு இல்லை ஆனாலும் எங்களுடைய நினைவுகளில் நீங்கள் பல உருவிலும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறீர்கள்.

வாழ்வில் ஒவ்வொரு நினைவுகளிலும்,செயல்களிலும் நாம் அனுபவிக்கும் ஒவ்வொரு விடயங்களிலும் நிச்சயமாக நீங்கள் கலந்திருப்பதை கண்களில் கண்டு கொள்கிறோம்.

இன்று இந்த கொரோனாவினால் நாங்கள் நிச்சயமாக நல்ல தந்தையை இழந்தோம் என்பதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை.

உங்களது வாழ்வில் நெடு தூரத்தை எமக்காகவே செலவழித்தீர்கள்,எமக்காக வாழ்ந்து, எமக்காக பல தியாகங்களை இங்கு எங்களோடு இருக்கும் காலங்களிலும் செய்தீர்கள். வெளிநாடு சென்றும் எமக்காகவே அயராது உழைத்தீர்கள். இன்று எமக்காகவே நீங்கள் உயிரை நீத்த நிலையும் ஏற்பட்டது. நிச்சயமாக இதற்காக நாங்கள் வருந்துகிறோம் தந்தையே.

தங்களது இருதிக் கிரியைகளை எங்களது கைகலாள் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டோம் இதனால் மிகவும் மன வேதனை அடைகிறோம்.

எங்கள் உயிர் தந்தையே உயிர் நீத்து எங்களை பிரிந்து விட்டீர் என்று எண்ணாதீர், உயிர் பிரிந்த எந்த உறவுகளும் மறைந்து விடுவதில்லை. தங்களோடு வாழ்ந்த ஒவ்வொரு உறவுகளும் இவ்வுலகில் வாழும் வரை அவர்களின் நினவவுகளில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். நாங்கள் இவ்வுலகில் வாழும் வரை எங்கள் நினைவுகளில் வாழ்ந்து கொண்டேதான் இருப்பீர்கள் தந்தையே.

வல்லஇறைவன் உங்களது இவ்வுலக வாழ்வை நற்பொருத்தத்துடன் பொருந்திக் கொண்டு தங்களுக்கு இடேற்றமான ஜன்னதில் பிர்தௌசில் இடமளிக்க பிராத்திக்கிறோம்.

அன்பு தந்தை #Buhary_Mohamed_Rafeek க்காக…

புதழ்வி மற்றும் புதழ்வர்கள்
M.R.Fathima Mathiha
M.R.Mohamed Razan
M.R.Mohamed Raslan

#Kuwait #Puttalam #Covid_19 #Miss #You #Dada 😪


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

POEM – A puzzling game

  • Tuesday,26 May 2020

POEM- Diabetes

  • Saturday,23 May 2020

POEM – The nature’s smile

  • Monday,18 May 2020
சுவடிக்கூடம்View All