Puttalam Online
regional-news

பரீட்சையில் சாதனை – புளிச்சாக்குளம்.மு.ம.வி.

  • 17 May 2020
  • 180 views

(க.மகாதேவன்-உடப்பு )

நடந்து முடிந்த (2019) க.பொ.த.(சா.த)பரீட்சை முடிவுகள் அண்மையில் வெளியாகின.

அதன்படி புத்தளம் தெற்குக் கல்விக் கோட்டத்திற்குட்பட்ட புளிச்சாக்குளம்  உமர் பாரூக் மகா வித்தியாலயத்திலிருந்து  தோற்றிய 60 மாணவர்களில் 78.33 வீதமான மாணவர்கள் உயர்தரம் கற்க தகுதி பெற்றுள்ளனர்.

இவர்களில் மின்ஹாஸ் பதுர்தீன் 9ஏ சித்தியும், சஸ்ஹா இர்ஷாத் 8ஏ,பி சித்தியும், றிஸ்னி சமீம் 7ஏ,2பி சித்தியும், நஸீக் நளீம் மற்றும் முஸ்னி காஸிம் ஆகியோர் 7ஏ,பி,சி,சித்தியும் பெற்று பாடசாலைக்கு நல்ல மதிப்பைப் பெற்றுக் கொடுத்துள்ளனர்.

இவர்களை பாடசாலை அதிபர் திரு.எம்.யு.எம்.சரீக் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பெற்றோர்கள், மாணவர்கள் பாராட்டியுள்ளனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All