Puttalam Online
regional-news

கச்சா ன் காற்று ஆரம்பம் – உடப்பு

  • 17 May 2020
  • 473 views

(க.மகாதேவன்-உடப்பு)
உடப்பில் தற்போது வாடைக்காற்று முடிவடைந்து தென்மேற்கு பருவக்காற்று (கச்சான் காற்று) வீச ஆரம்பித்துள்ளது.

வழமையாக வாடைக்காற்று ஆரம்பித்ததும் உடப்பிலுள்ள கடற்றொழிலாளர்கள் தமது தொழிலை ஆரம்பிப்பது வழக்கமாகும். இந்த தொழிலானது சுமார் ஆறு மாதங்கள் நடைமுறையில் இருக்கும். இதில் கரைவலைத் தொழிலாளர்கள், இயந்திரப்படகு, தெப்பம், போன்றவற்றில் தொழில் செய்பவர்கள் அடங்குவார்கள்.

உடப்பில் கச்சான் காற்று ஆரம்பித்ததும் மீனவர்கள் தொழில் செய்ய முடியாது காணப்படுவார்கள். இதன் நிமித்தம்  இந்த தொழிலாளர்கள் வடபகுதிக்கு செல்வது வழக்கம். அதன்படி முல்லைத்தீவு, அலம்பில், வண்ணாங்குளம், சல்லக்கனி, முள்ளி வாய்க்கால், வளையாமிடம், செம்மலை போன்ற இடங்களுக்கு  செல்வதுண்டு.

அத்துடன் திருகோணமலையிலுள்ள சலிப்பையாறு போன்ற இடங்களுக்கும் தொழிலுக்காக செல்வார்கள். இதன் நிமித்தம் சில தொழிலாளர்கள்  தொழிலுக்கு செல்ல முடியாமலும் ஊரில் இருப்பதையும் காணக்கூடியதாக உள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All