Puttalam Online
current

Puttalam Online பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்வு

  • 4 June 2020
  • 398 views

Puttalam Online Team மற்றும் Puttalam Circle அங்கத்தவர்களின் பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்வு புத்தளம் காஸிமிய்யா அரபுக் கலாசாலையில் 2020.06.03  திகதி ஓய்வுநிலை கல்விப் பணிப்பாளர் Z.A.ஸன்ஹிர், அஷ்செய்க்  சட்டத்தரணி பஸ்ஸுர் ரஹ்மான், மென்பொருள் பொறியியலாளர் M.I.M. ருஷ்தி ஆகியோரின் நெறிப்படுத்தலுடன் இடம்பெற்றது.

காலை 10.30 தொடக்கம் பி.ப 3.30 வரை இடம்பெற்ற இந்நிகழ்வில் Puttalam Online Team மற்றும் Puttalam Circle  அங்கத்தவர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

புத்தளம் பிரதேசத்தின் மரபுரிமைகளைப் பாதுகாத்தல், எழுத்துருவிலுள்ள ஆவணங்களையும் பிரதேசத்த்தின் அரிய புகைப்படங்களையும் இணையத்தளத்துள்குள் உள்வாங்கிப் பாதுகாக்கும் பணியை மேலும் வினைத்திறனுடன் எதிர்காலத்தில் முன்னெடுப்பது தொடர்பாக நீண்ட கலந்தரையாடல் இடம்பெற்றதுடன், புத்தளம் பிரதேசத்தின் செய்திகளை ஆவணப்படுத்தும் வேலைத்திட்டத்தை மேலும் வலுப்படுத்துவதற்காக அங்கத்தவர்களுக்கான பொறுப்புக்களும் வழங்கப்பட்டன.

Puttalam Online கடந்துவந்த பாதை, அதன் சட்டரீதியான அந்தஸ்து, தொழில்நுட்ப நோக்கு தொடர்பான அனுபவங்கள் பகிரப்பட்டதோடு, எதிர்கால Puttalam Online பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

மதிய போசன இடைவேளையைத் தொடர்ந்து இன்றைய நிகழ்வு தொடர்பான feedback ஐப் பெறுவதற்காக S.M. இஷாம் மரைக்கார் mentimeter இணையத் தளத்தைப் பயன்படுத்தி அங்கத்தவர்களை பிரயோக செயற்பாட்டில் பங்குபற்றச் செய்தமை மிகவும் சுவாரசியமாக இருந்தது.

செய்தி – ரஷ்மி ஸஹீத்

புகைப்படங்கள் – அப்லல்


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All