Puttalam Online
regional-news

குவைத் ரஹ்மா அமைப்பு புத்தளம் வைத்தியசாலைக்கு 11 இலட்சம் பெறுமதியான பொருட்கள் அன்பளிப்பு

  • 12 June 2020
  • 426 views

Mohamed Muhsi

ஒரு சந்தர்ப்பத்தில் புத்தளம் வைத்தியசாலைக்கு குவைத் பல்கலைக்கழக மாணவர்கள் வருகைத் தந்த போது விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கு அமைய அவர்கள் திரட்டிய நிதியின் மூலம் குவைத் ரஹ்மா சர்வதேச அமைப்பு “மேர்சி லங்கா” ஊடாக 11 இலட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட பெறுமதியான பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

ஐவகை தள்ளுவண்டிகள் (Trolley) 48, cupboards 60 ஆகியவற்றை புத்தளம் வைத்தியசாலைக்கு மேர்சி கல்வி வளாகப் பணிப்பாளர் பவுசுர் ரஹ்மான், திட்டப் பணிப்பாளர் எம்.ஆர்.எம்.முனாஸ் ஆகியோர் வைத்திய அத்தியட்சர் சுமித் அதபத்து தலைமையிலான மருத்துவர்கள், தாதியர்கள் இடம் கையளித்தனர்.

இதற்கு முன்னரும் மேர்சி லங்கா மூலம் பல்வேறு மருத்துவ உபகரணங்கள், சாதனங்கள், பொருட்கள் புத்தளம் வைத்தியசாலைக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All