Puttalam Online
regional-news

வெட்டாளை அசன்குத்தூஸ் வித்தியாலயத்தில் சிரமதானம்

  • 28 June 2020
  • 134 views

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மூடப்பட்ட பாடசாலைகள், 105 நாட்களுக்கு பின்னர் நாளைய தினம் (29/06/2020) திறக்கப்படவுள்ளன.

நான்கு கட்டங்களாக பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என கல்வியமைச்சர் டளஸ் அழகபெரும மற்றும் அமைச்சின் அதிகாரிகள் அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறியிருந்த நிலையில் மாணவர்களின் வருகையை தவிர்த்து பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களின் வருகையுடன் நாளைய தினம் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

அந்தவகையில் பாடசாலையை மீளத் திறப்பதன் முதற் கட்ட நடவடிக்கையாக வெட்டாளை அசன்குத்தூஸ் வித்தியாலயத்தில் சிரமதான நடவடிக்கை இடம் பெற்றது. இதில் பாடசாலை ஆசிரியர்கள்,பெற்றோர்கள் கலந்து கொண்டு பாடசாலை வளாகம் முழுவதையும் துப்புரவு செய்து மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்கு உதவி புரிந்தனர்.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All