(பசில் ஆசிரியர்)
ஒன்றாக முன்னோக்கி எனும் தொனிப்பொருளில் கல்வித் துறையின் பொறி முறை செயற்பாட்டு நகர்வு புத்தளம் சாஹிரா கல்லூரியில் இன்று (30-06-2020) இடம்பெற்றது.
2020 க.பொ.த சா/ த மாணவர்களின் அடைவு மட்டத்தை மேம்படுத்துவதற்கான இச் செயற்றிட்டத்தின் இரண்டாவது கட்ட நகர்வுகள் அதிபர் தலைமையில் உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டன.
இச் செயற்பாட்டின் கட்டங்களாக ஆரம்பகால இணையவழி மற்றும் நேரடியான கலந்துரையாடலுக்குப் பின்னர் இம்முறை ஆய்வு ரீதியான அணுகுமுறையை வேண்டி மாற்றத்தை நோக்கி பயணிக்கும் ஒரு செயற்பாடாக முன்னெடுக்கப்படுகிறது.
பாடசாலையின் பழைய மாணவர்கள் ஏற்பாட்டில் கல்வி பயிலும் மாணவர்கள், பாடசாலை நிர்வாகத்தினர், கல்விசார், கல்விசாரா ஊழியர்கள் முதலிய குழுக்களோடு அனைவரையும் ஒன்றிணைத்து மேற்படி செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அஸ்வர் மண்டபத்தில் காலை 09.00 மணிக்கு ஆரம்பமான இந்நிகழ்வில்
திரு. ரமனேஷ் என்பவர் வளவாளராக கலந்து கொண்டிருந்தார்.
WAK
Share the post "ஸாஹிராவில் மாணவர்களுக்கு கல்வி செயற்பாடு பற்றிய செயலமர்வு"