Puttalam Online
regional-news

நாகவில்லு எருக்கலம்பிட்டியில் ஆரம்ப மருத்துவ சிகிச்சை பிரிவு அங்குரார்ப்பணம்

  • 4 July 2020
  • 245 views

(Wasim Ibnu Yusuf)

புத்தளம் நாகவில்லு எருக்கலம்பிட்டியில் நீண்ட காலமாக நிர்மாணிக்கப்பட்டிருந்த ஆரம்ப மருத்துவ சிகிச்சை பிரிவு அக்கிராம மக்களின் அயராது உழைப்பால் நேற்று முன்தினம் (02.07.2020) திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மாகாண சுகாதார பணிப்பாளர் நூர்தீன் பரீத் கலந்து கொண்டதோடு புத்தளம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆர்.எம்.எஸ்.தினூஷா பர்னாந்து, புத்தளம் நாகவில்லு எருக்கலம்பிட்டி ஜூம்ஆ மஸ்ஜித் நிர்வாகிகள், புத்தளம் தள வைத்தியசாலை வைத்தியர்கள், சமூக ஆர்வலர்கள். ஊர்மக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் H.M. ரயீஸ் அவர்களின் பாரிய முயற்சியின் ஊடாகவும் முன்னாள் வட மேல் மாகாண சபை உறுப்பினர் S.H.M. நியாஸ் அவர்களின் வழிகாட்டுதலுடனும் முன்னாள் சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிமின் நிதியொதுக்கீட்டில் குறித்த ஆரம்ப மருத்துவ சிகிச்சை பிரிவுக்கான கட்டடம் நிர்மாணிக்கப்பட்டமை குறிப்பிடத்தது.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All