Puttalam Online
other-news

பஹ்ரைன் நாட்டிலிருந்து இலங்கையர்கள் நாடு திரும்பினர்

  • 5 July 2020
  • 160 views

கொரோனா வைரஸ் தொற்று பதற்றம் காரணமாக நாட்டுக்குள் வரமுடியாது பஹ்ரேனில் சிக்கித்தவித்திருந்த  290 இலங்கையர்கள் இன்று (05/07/2020) நாடு திரும்பியுள்ளனர்.

ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விஷேட விமானம் ஒன்றின் மூலம் குறித்த நபர்கள் வருகை தந்துள்ளனர். இவர்களுள் அதிகமானவர்கள் அந்நாட்டிற்கு வேலைக்கு சென்றவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பீ.சீ.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All