Puttalam Online
regional-news

கல்பிட்டியில் தராசுக்கூட்டமைப்பின் மக்கள் சந்திப்பு

  • 6 July 2020
  • 204 views

வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடும் தராசுக்கூட்டமைப்பின் மக்கள் சந்திப்புக்கள் கல்பிட்டி நகரில் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் நடைபெற்றன.

33 வருட காலமாக புத்தளம் தொகுதிக்கான சிறுபான்மை பாராளுமன்ற உறுப்பினரை இழந்த நாம் இம்முறையேனும் அதனை பெற்றுக் கொள்ளும் நோக்கில் உருவாக்கப்பட்ட “தராசு கூட்டணி” யின் ஏற்பாட்டு குழுவினரால் ஒழுங்கு செய்யப்பட்ட இம்மக்கள் சந்திப்புக்கள் கல்பிட்டி நகரின் பல பகுதிகளில் இடம் பெற்றன.

இதன் போது தராசு கூட்டணியின் நோக்கம், உருவாக்கம், வாக்களிப்பு வீதத்தினை அதிகரிப்பதற்கான உத்திகள், கூட்டணியின் வெற்றிக்கான சாத்தியப்பாடுகள் பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இதன் போது கருத்து தெரிவித்த பொதுமக்கள்,உலமாக்கள், இளைஞர்கள் உள்ளிட்டோர்  தமது ஊரின் முழுமையான ஆதரவு தராசு கூட்டணிக்கே என்பதை உறுதிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All