Puttalam Online
regional-news

புத்தளம் வாழ் யாழ்ப்பாண வாக்காளர்களை சந்தித்தார் சுமந்திரன்

  • 10 July 2020
  • 289 views

யாழில் வாக்களிக்கும் புத்தளம் வாழ் முஸ்லிம்களை நேற்று (09/07/2020) எம். ஏ. சுமந்திரன் சந்தித்துப் பேசினார்.

வெறும் தேர்தல் பரப்புரையாக இல்லாது, தேசிய அரசியலில் ஏற்பட்டிருக்கும் கடும்போக்கான மாற்றங்கள் குறித்தும், தமிழ் பேசும் மக்கள் ஒன்றுபட்டு நிற்க வேண்டியதன் அவசியம் குறித்தும் அவர் இங்கு அதிகம் பேசினார்.

“சிங்கள பௌத்த மேலாண்மை வாதத்தை மட்டும் வைத்துக் கொண்டு இலங்கையில் ஆட்சியேற முடியும் என்று செய்து காட்டிய கட்சியை நாம் தேர்தலில் சந்திக்கிறோம். இவர்கள் தமிழரையும், முஸ்லிம்களையும் ஒரே நேரத்தில் அடிக்கமாட்டார்கள். இது வரலாறு எமக்குச் சொல்லும் செய்தி. ஆனால் தனித்தனியாக தமிழரையும், முஸ்லிம்களையும் அடிப்பார்கள்.

தமிழரை அடிக்கும் போது முஸ்லிம்களும், முஸ்லிம் மக்களை அடிக்கும் போது தமிழ் மக்களும் மாறி மாறிக் குரல் கொடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். கை கொட்டி வேடிக்கை பார்க்கின் இரு இனங்களுமே பாரிய அழிவுகளைச் சந்திக்கும் காலமாக இது மாறும்.” எனவும் குறிப்பிட்டார்.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All