Puttalam Online
regional-news

புத்தளம் காற்பந்து லீக் – இராணுவ தளபதிகள் சந்திப்பு

  • 11 July 2020
  • 276 views

(PFL)

புத்தளம் இராணுவ முகாம், இராணுவ தளபதியின் வேண்டுகோளின் பேரில் புத்தளம் காற்பந்து லீக் உறுப்பினர்கள் நேற்று (10/07/2020) கலந்துரையாடல் ஒன்றினை இராணுவ முகாமில் முன்னெடுத்தனர்.

புத்தளம் இராணுவ முகாம் விளையாட்டு பிரிவு காற்பந்து அணியினை வளர்ச்சி பாதைக்கு இட்டு செல்லும் முகமாக ஒப்பந்த அடிப்படையில் சிறந்த விளையாட்டு வீரர்களை உள்வாங்க உள்ளது.

புத்தளம் காற்பந்துக்கு நன்கு அறியப்பட்டுள்ளதால் புத்தளம் காற்பந்து லீக்கின் ஆதரவை இந்த இராணுவ விளையாட்டு பிரிவு எதிர்பார்க்கின்றது. பிராந்தியத்தில் கால்பந்தின் வளர்ச்சிக்கு புத்தளம் காற்பந்து லீக் தனது எதிர்கால ஆதரவை வழங்குவதாக இதன்போது உறுதியளித்தது.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All