Puttalam Online
regional-news

சமுர்த்தி வங்கி கணக்கின் ஊடாக அரசாங்க உதவித்தொகை வழங்க நடவடிக்கை

  • 16 July 2020
  • 301 views

கொரோனா (கொவிட் -19) நோய் தொற்று, பதற்றம் உள்ளிட்ட  அசாதாரண நிலை காரணமாக வருமானம் இழந்தவர்களுக்கு வழங்கப்படும் அரசாங்க உதவித்தொகை இனிவரும் காலங்களில் சமுர்த்தி வங்கி கணக்கின் ஊடாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ரூபா 500 இணை செலுத்தி சமுர்த்தி வங்கியில் கணக்கினை திறக்க வேண்டும் என புத்தளம் நகரசபை உறுப்பினர் முஹம்மத் ரஸ்மி தெரிவித்தார். இச்செயற்பாடுகள் 17ம் திகதிக்கு பின்னர் ஆரம்பமாகும் எனவும் தெரிவித்தார்.

இவ்வாறானநிலையில் ஏற்கனவே சமுர்த்தி வங்கியில் கணக்கு உள்ளவர்கள் தவிர்ந்த ஏனையவர்களுக்கு அவரவர் பிரதேசத்திற்கே வந்து சமுர்த்தி அதிகாரிகள் மூலமாக வங்கி கணக்குகள் திறப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

சுகாதார காரணங்கள் நிமித்தம் சமுர்த்தி வங்கியில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் முகமாகவே இவை முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

WAK

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All