Puttalam Online
other-news

PCR பரிசோதனைகளுக்காக கொவிட் -19 நிதியத்திலிருந்து 36 மில்லியன்

  • 25 July 2020
  • 173 views

சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்படும் அத்தியவசிய பி.சி.ஆர் பரிசோதனைகளுக்காக சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்தில் இருந்து 36,605,812 ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது.

அதனுடன் தொடர்புடைய காசோலை நேற்று (24/07/2020) மத்திய வங்கியின் ஆளுநர், கொவிட்-19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்தின் முகாமைத்துவ குழுத் தலைவர் கலாநிதி டபிள்யூ.டீ.லக்ஷமனால் சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரால் வைத்திய நிபுணர் சஞ்சீவ முனசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.

பி.சி.ஆர் பரிசோதனைகள் மற்றும் சுகாதார பாதுகாப்பு ஆலோசனை திட்டங்களுக்கு பயன்படுத்துவதற்காக இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் கொவிட் -19 நிதியத்தின் மீதி 1525 மில்லியனை கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.Ad

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All