Puttalam Online
regional-news

புத்தளம் சாஹிராவில் இணைய வழி கற்பித்தல் சேவை ஆரம்பித்து வைப்பு

  • 4 August 2020
  • 243 views

(பஸீல் ஆசிரியர்)

மாணவர்கள் சுயமாக கற்றுக் கொள்வதற்காக நேரம் மற்றும் விடுமுறை காலங்களை பயன்படுத்துவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொள்ளும் நோக்கோடு புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரி YouTube (வலையொளி ) வழி இணைய கற்பித்தல் சேவையை ஆரம்பித்துள்ளது.

தரம் 6 முதல் 13 வரை சகல துறைகளுக்குமான பாடத்திட்டங்கள் காணொளி video வடிவில் பதிவேற்றப்பட்டுள்ளன.

பொருத்தமானவர்கள் இணைப்பைப் பெற்று பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம் . இதை முழுமையாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு கொண்டு சேருங்கள். இத்துறை சார்ந்த கற்றலை மேற்கொள்வதற்கும் மேம்படுத்துவதற்கும் பெற்றோரின் ஒத்துழைப்பும் உதவியும் மேற்பார்வையும் அவசியம் என்பதை கவனத்திற் கொள்ளவும்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையின் காரணமாக ஏற்படுத்தப்பட்ட ஒரு புதிய பரீச்சாத்த முயற்சி இதுவாகும். எமது வெள்ளோட்டத்தில் கைகோர்க்க அழைக்கிறோம்.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All