Puttalam Online
regional-news

புத்தளம் நகர மக்கள் வாக்கு சாவடியை நோக்கி படையெடுப்பு

  • 5 August 2020
  • 482 views

பாராளுமன்ற உறுப்பினரை தெரிவு செய்யும் முகமாக புத்தளம் நகர மக்கள் ஆங்காங்கே அமைக்கப்பட்டிருக்கும் வாக்கு சாவடியை நோக்கி இன்று (05/08/2020) குடும்பம் சகிதம் படையெடுத்தனர்.

வாக்கு சாவடிக்கு வருகை தரும் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வருமாறும், பேனை ஒன்றை கையில் வைத்திருக்குமாறும் தேர்தல் கடமையில் ஈடுபட்டிருப்போர் தெரிவிக்கின்றனர்.

வாக்கு சாவடி அமைந்திருக்கும் இடத்தினுள் கையடக்க தொலைபேசியினை பாவித்தல், புகைப்படம் எடுத்தல், வீடியோ பண்ணுதல், புகைப்பிடித்தல், மதுபானம் உள்ளிட்ட போதைப்பொருள் பாவித்தல் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All