Puttalam Online
current

புத்தளத்தில் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றி

  • 7 August 2020
  • 378 views

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 9 ஆவது பாராளுமன்றத்திற்கான புதிய உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தலில் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு, தராசு சின்னத்தில் போட்டியிட்ட அலி சப்ரி ரஹீம் அமோக வெற்றியீட்டி வரலாற்று சாதனை புரிந்தார்.

தற்போதுள்ள தேர்தல் நடைமுறை 1978 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டபின்னர் புத்தளம் தேர்தல் தொகுதியில் இருந்து இதுவரை எந்தவொரு உறுப்பினரும் பாராளுமன்றத்துக்குத் தெரிவாகவில்லை. அதேவேளை இலங்கைப் பாராளுமன்றத்துக்கு முதலாவது உறுப்பினரை அனுப்பியது புத்தளம் தொகுதியே என்பதும் குறிப்பிடத்தகக்கத்து. இம்முறை இடம்பெற்ற தேர்தலில் புத்தளம் மாவட்டத்துக்குரித்தான எட்டு பிரதிநிதிகளில் இருவர் புத்தளம் தேர்தல் தொகுதியில் இருந்து தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்ட சிந்திக்க மாயாதுன்ன, முஸ்லிம் தேசிய கூட்டமைப்பில் போட்டியிட்ட அலி சப்ரி ரஹீம் ஆகியோரே அவ்விருவருமாவார்.

இம்முறை புத்தளம் தொகுதிக்கென ஒரு முஸ்லிம் பிரதிநிதியைப் பெரும் நோக்குடன் சமூக ஆர்வலர்களால் வியூகங்கள் வகுக்கப்பட்டு வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டனர். புத்தளத்தில் பிரசித்தமான அரசியல்வாதிகள் அனைவரும் ஓரணியில் இணைந்து முஸ்லிம் தேசிய கூட்டமைப்பில், தராசு சின்னத்தில் போட்டியிட்டனர். வாக்காளர்களின் பூரண ஆதரவுடன் இக்கூட்டணி 47,383 வாக்குகளைப்பெற்று புத்தளம் தொகுதியைத் தனதாக்கிக்கொண்டது.

அதிகூடிய  வாக்குகளைப்பெற்று  வெற்றியீட்டிய வேட்பாளர் அலி சப்ரி ரஹீம் அவர்களை puttalam online மனமார வாழ்த்துவதுடன் இவருடன்  இணைந்து போட்டியிட்டு கட்சியின் வாக்குகளை அதிகரிக்கச்செய்து வரலாற்று சாதனையை நிகழ்த்தவைத்த இக்கட்சியின் உறுப்பினர்கள், பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் இவ்வமைப்பை ஒழுங்கமைத்து செயற்படுத்திய சமூக ஆர்வலர்கள், வாக்களித்த வாக்காளப்பெருமக்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும்  தெரிவிப்பதுடன் ஏக வல்லோனைப் பிரார்திக்கின்றது.

Puttalam – Preferential votes:
( SLPP – 05

1. Sanath Nishantha
80,082
2. Priyankara Jayaratne
74,425
3. Arundika Fernando
70,892
4. Amal Mayadunna
46,058
5. Ashoka Priyantha
41,612

( SJB -02 )
1. Hector Appuhami
34,127
2. Niroshan Perera
31,636
( MNA -01)
1. Abdul Ali sabri
33,509


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All