Puttalam Online
regional-news

மனிதாபிமானமிக்க ஆட்சியினை வழங்குவதற்கே அரசாங்கத்திற்கு மக்கள் ஆணையினை வழங்கியுள்ளனர் – பா.உ அலி சப்ரி ரஹீம்

  • 26 August 2020
  • 229 views

முஸ்லிம்களின் ஜனாஸா எறிப்பு தொடர்பில் நான் மிகவும் கவலையடைத்துள்ளேன். இந்த நாட்டில் வாழும் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் விடயங்களில் கடும் போக்குத் தன்மையினை தளர்த்தி மென்மையான பார்வையினை அரசாங்கம் செலுத்த வேண்டும்.
 .
மேலும் நடை பெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் தற்போதைய அரசாங்கத்திற்கு மக்கள் ஆணையினை வழங்கியுள்ளமையானது, சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் மீது கடும்போக்குத் தன்மையினை பிரயோகிப்பதற்கு அல்ல, நல்லதொரு மனிதாபிமானமிக்க ஆட்சியினை வழங்குவதற்கு என்பதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே,
இதே வேளை தேர்தலில் போட்டியிட்ட ஏனைய பெரும்பான்மை வேட்பாளர்களை கொண்ட கட்சிக்கும் மக்கள் வாக்களித்துள்ளமையானது, இன்னும் இந்த நாட்டில் சமமான அரசியல் தீர்மானம் மேற்கொள்ளும் சுதந்திரத்தன்மை காணப்படுவதையே எடுத்துக்காட்டுவதாகும்
கொரோனா தொற்றும் முஸ்லிம் ஜனாஸாக்களின் எறிப்பு என்பது சுகாதார அதிகாரிகளின் தீர்மானத்தின் படி இடம் பெறுவதாக கூறப்பட்ட போதும், சர்வதேச நடைமுறையானது இதற்கு மாறாக இருப்பதை ஆட்சியில் இருக்கின்றவர்கள் காணாமல் இருக்கின்றார்களா? என மக்கள் கேள்வி கேற்கின்றனர். இதற்கு ஆட்சியாளர்கள் பதில் கூற மாட்டார் என்பதும் மக்களுக்கு தெரியும்.
 .
முஸ்லிம்களின் ஜனாசாக்களின் எறிப்பால் எமது உள்ளம் வெகுவாக புண்பட்டுள்ளதை இந்த அரசாங்கத்துக்கு நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
 .
எடுக்கப்பட்ட தீர்மானங்கள் மனிதர்களால் இயற்றப்பட்ட சட்டங்களுக்கமைவானதால் இது முழுமையானதொன்றாக இருக்காது என்பதினால் முஸ்லிம் ஜனாசாக்களை எறிப்பது தொடர்பில் அரசாங்கம் மீள்பரிசோதனை செய்து எமது தாய் நாட்டின் பற்றினை மேலும் உறுதிப்படுத்துவது ஆட்சியாளர்களின் கைகளில் தங்கியுள்ளது.
.
WAK
 .


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All