Puttalam Online
regional-news

அமைதிப்படையணியிலிருந்து (Silent Volunteer) விலகினார் இஷாம் மரிக்கார்

  • 1 September 2020
  • 283 views

புத்தளத்தில் உருவாகி தேசியம், சர்வதேசம் என்ற அளவில் தமது சேவைகளை விரிவாக்கிய அமைப்பான ‘Silent Volunteer’ லிருந்து அதன் ஸ்தாபகர் இஷாம் மரிக்கார் அண்மையில் விலகினார்.

2011ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு கடந்த ஒன்பது வருடங்களாக மாணவர்கள், இளைஞர் யுவதிகள் மத்தியில் கல்வி வளர்ச்சி, துறைசார் மெருகூட்டல் உள்ளிட்ட சமூக சேவைகளை செய்து வந்துள்ள நிலையில் அதன் ஸ்தாபகர் அமைப்பிலிருந்து விலக தீர்மானித்துள்ளார்.

ஸ்தாபகர் தமது அடுத்த கட்ட இலக்குகளை நோக்கி பயணம் மேற்கொள்ளவுள்ளதாலும் இளைய தலைமுறைகள் இந்த அமைப்பை திறம்பட வழிநடாத்த பயிற்றுவிக்கப்பட்டுள்ளதாலும் தமது இந்த விலகல் தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All