Puttalam Online
regional-news

புத்தளம் பாத்திமாவின் சிங்கள எழுத்தாளர்

  • 22 September 2020
  • 473 views

பாத்திமாவின் எழுத்தாளர் நேற்று (21.09.2020) பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

பாத்திமா பாலிகா மகா வித்தியாலயத்தில் சிங்கள மொழிப்பிரிவில் ஆசிரியராக கடமைபுரியும் ஆசிரியை நிலந்தி பெர்னோன்டொ அவர்கள் நீண்ட நாட்களாக சிங்கள மொழி இலக்கியத்தில் பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தி வருபவர்.
அந்த வகையில் அவர் இது வரை 4 நூல்களை வெளியிட்டிருப்பதோடு 5 ஆவது நூல் பதிப்பில் இருப்பதோடு ஆறாவதாக நாவல் ஒன்றினையும் எழுதிக்கொண்டிருக்கிறார்.
இவரது நூல்கள் மாணவப்பராயத்தினை மையப்படுத்திய அறிவூட்டும் கதைகளாகவும் அமைந்திருக்கின்றன.

இவ்வாறான எழுத்தாளரை ஆசிரியராக கொண்டிருக்கின்ற பாடசாலை அவருக்கான கௌரவிப்பு நிகழ்வினை காலைக்கூட்ட வேளையின் போது நிகழ்த்தியது.

பாடசாலையின் அதிபர் திருமதி ரஜியா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வடக்கு மற்றும் ஆனமடுவ கோட்டப்பிரிவுகளுக்கு பொறுப்பான சிங்கள மொழிப்பாட ஆசிரிய ஆலோசகர் எ.எச்.எம்.ரத்னசிரி அபேரத்ன அவர்கள் கலந்துக்கொண்டு நூல் விமர்சனம் செய்தார். நிகழ்வில் பாடசாலையில் சிங்கள மொழிப்பிரிவில் நீண்ட நாட்களாக பொறுப்பாசிரியராக கடமையாற்றி ஓய்வு பெற்ற ஆசிரியை திருமதி மஹ்தியா அமீன் அவர்களால்’கவி” வாசிக்கப்பட்டது.பிரதி அதிபர் திருமதி ஸரீனா,உதவி அதிபர் திருமதி மாஹிரா ஆகியோரினால் மலர்ச்செண்டு வழங்கி வாழ்த்துக்கூறப்பட்டது.

மேலும் கௌரவிப்பு நிகழ்வில் பாடசாலையின் அதிபர் மற்றும் முகாமைத்துவ குழு உறுப்பினர்களால் நினைவுச்சின்னம் வழங்கப்பட்டதோடு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
பிரதி அதிபர் திரு ரம்சின் அவர்களின் நன்றி உரையுடன் நிகழ்வு இனிதே நிறைவுற்றது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All