Puttalam Online
regional-news

மெளலீது தமாம் வைபவம் ஒத்தி வைப்பு

  • 12 October 2020
  • 230 views

(ரூஸி சனூன் புத்தளம்)
.
புத்தளம் மாவட்டம் கீரியங்கள்ளி தர்ஹா ஷரீபின் சங்கைக்குரிய மகான் ஆறிபே ரப்பானி, ஆஷிகே ரஹ்மானி, சாஹிபே கராமா, செய்யது சாதாத் அஷ் – ஷெய்யது அஷ் – ஷெய்ஹு புராக்குத்தீன் காதிர் வலியுல்லாஹ் (கத்தசல்லாஹு சிர்ரகுல் அசீஸ்) அன்னவர்களின் பெயரால் எதிர் வரும் 2020.10. 16, 17 ம் திகதிகளில்(வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில்) நடைபெறவிருந்த றாதிப் மெளலிது தமாம் வைபவம் (கந்தூரி) நாட்டின் தற்போதைய கொரோனா 19 தாக்க நிலைமையைக் கருத்திற் கொண்டு நடைபெற மாட்டாதென்பதை மிகுந்த கவலையுடன் பரிபாலன சபை தெரிவித்துள்ளது.
.
எதிர் வரும் காலங்களில் இந்நிகழ்வை மிகச் சிறப்பாகச் செய்ய தாங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பினை அன்புடன் எதிர்பார்ப்பதாகவும்,தாங்கள் அனைவரும் இதுவரைகாலமும் எமக்களித்த ஒத்துழைப்பிற்கு தமது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்வதாகவும் பரிபாலன சபை மேலும் தெரிவித்துள்ளது.
.
WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All