Puttalam Online
regional-news

புத்தளம் மாவட்ட பாதைகள் விரைவில் அபிவிருத்தி

  • 14 October 2020
  • 297 views

கிராமிய வீதிகள் மற்றும் உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் கெளரவ நிமல் லான்ஷா அவர்களை புத்தளம் மாவட்டத்தின் பொதுஜன பெரமுன கட்சியின் முஸ்லிம் பிரதேச அமைப்பாளரும், புத்தளம் தொகுதியின் இணை அமைப்பாளருமான அல்ஹாஜ் AHM ரியாஸ் அவர்கள் அண்மையில் அவரது காரியாலயத்தில் சந்தித்தார்.

இதன் போது புத்தளம் மாவட்டத்தில் உள்ள பல வீதிகளை, ஜனாதிபதியின் ஒரு லட்சம் பாதைகள் அபிவிருத்தித்திட்டத்தின் கீழ் காபட் பாதையாகத் தரமுயர்த்துவது சம்பந்தமாக மகஜர் ஒன்றை கௌரவ அமைச்சர் அவர்களிடம் கையளித்தார்.

அதனைப்பெற்றுக்கொண்ட கௌரவ அமைச்சர் அவர்கள் உடனடியாக, புளிச்சாக்குளம் தொடக்கம் உடப்பு வரையான சுமார் 2 கி.மீ காபட் பாதை,கனமூலை தொடக்கம் தொடுவா வரையிலான 2 கி.மீ காபட் பாதை, மதவாக்குளம் தொடக்கம் கடையாந்தலுவ வரையான 2 கி.மீ காபட் பாதை என 6 கி.மீ காபட் பாதைகளை அமைப்பதற்கான அனுமதியையும் வழங்கி வைத்தார்.

இவ்வீதி அபிவிருத்திகள் கூடிய விரைவில் ஆரம்பிக்கப்படவிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All