Puttalam Online
regional-news

பிரதேச செயலாளருக்கு எதிராக கல்பிட்டியில் ஆர்ப்பாட்டம்

  • 22 October 2020
  • 316 views

(Irfan Rizwan)
 .
கல்பிட்டி பிரதேச பெண் கிராம சேவகருக்கு தொலைபேசியில் பாலியல் தொல்லை கொடுத்த பிரதேச செயலாளர் நந்தன சோமதிலக்கவுக்கு எதிராக கல்பிட்டி நகரில் இன்று (22/10/2020) ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
 .
மூன்று தினங்களுக்கு முன் பொலிஸில் முறைப்பாடு செய்து அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு கைதாகி சில நிமிடங்களிலேயே பிணையில் விடுவிக்கப்பட்டார்.
மீண்டும் நேற்று கல்பிட்டி பிரதேச செயலகத்திற்கு அவர் கடமைக்கு அமர்த்தப்பட்டதை தொடர்ந்தே மேற்படி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
 .
இந்த ஆர்பாட்டத்திற்கு கல்பிட்டி நகர அரசியல்வாதிகள் முழு ஒத்துழைப்பை வழங்கி இருந்ததுடன், இன்றைய ஆர்பாட்டத்தில் பெருந்திலான மக்கள் கலந்துக் கொண்டிருந்தனர்.
.
WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
சுவடிக்கூடம்View All