Puttalam Online
regional-news

கற்பிட்டி பிரதேச மக்கள் அச்சமடைய தேவையில்லை – பிரதேச சபைத் தலைவர்

  • 26 October 2020
  • 533 views

(Rizvi Hussain)

கற்பிட்டி பிரதேச மக்கள் அச்சமடைய தேவையில்லை என பிரதேச சபைத் தலைவர் A.M. இன்பாஸ் அவர்கள் தெரிவித்துள்ளார். கற்பிட்டி பிரதேசத்தில் 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது PCR பரிசோதனையின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கல்பிட்டி பிரதேச சபை தலைவர் என்ற வகையில் மக்களுடைய பாதுகாப்புக்காக எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பில் கல்பிட்டி சுகாதார வைத்திய அதிகாரி,பிரதேச செயலாளர், கல்பிட்டி பொலிஸ், கடற்படை உயர் அதிகாரிகளுடன் இன்று (26) காலை அவசரமாக கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இதன்போதே, மக்கள் அச்சமடையத் தேவையில்லை எனவும், உரிய முறையில் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
சுவடிக்கூடம்View All