Puttalam Online
regional-news

குறைந்த வருமானம் பெறுவோருக்கான வேலைவாய்ப்பு வழங்கும் நிகழ்வு

  • 26 October 2020
  • 249 views

பொது ஜன பெரமுன அரசாங்கத்தின் கீழ் வழங்கப்படும் மேற்படி ஒரு லட்சம் பேருக்கான வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 34ஆயிரம் பேருக்கான வேலைவாய்ப்புகள் நேற்று (25/10/2020) வழங்கப்பட்டது.
 .
இதற்கமைவாக பொதுஜன பெரமுன கட்சியின் புத்தளம் மாவட்ட முஸ்லிம் பிரதேச அமைப்பாளரும் மற்றும் புத்தளம் தொகுதி இணை அமைப்பாளருமான அல்ஹாஜ் AHM ரியாஸ் அவர்களுக்கு வழங்கப்பட்ட 100 வெற்றிடங்களுக்கான முதற்கட்ட வேலைவாய்ப்பு வழங்கும் நிகழ்வுக்கமைய பதினொரு பேருக்கான வேலைவாய்ப்புகள் வழங்கி வைக்கப்பட்டது.
 .
இந்நிகழ்வின்போது பொதுஜனபெரமுன கட்சியின் யாழ்,கிளிநொச்சி மாவட்ட இடம்பெயர் புத்தளம் மக்களுக்கான அமைப்பாளர் முயீன் மற்றும் முன்னால் கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் AHM ரிஸ்வி, பொது ஜன பெரமுன கட்சியின் கற்பிட்டி நகர அமைப்பாளர் MHM நாசர், ரிஸ்வி மௌலவி இவர்களோடு கட்சியின் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
.
WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
சுவடிக்கூடம்View All