Puttalam Online
other-news

அரிசிக்கான அதிகபட்ச விற்பனை விலை நிர்ணயம்

  • 5 November 2020
  • 176 views

உடன் அமுலுக்கு வரும் வகையில் இன்று நள்ளிரவு முதல் அரிசி உற்பத்தியாளர்களுக்கு மற்றும் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு அரிசிக்கான அதிகபட்ச விற்பனை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதனுடன் தொடர்புடைய வர்த்தமானி அறிவித்தல் நுகர்வோர் விவகார அதிகார சபையால் வௌியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, 1 கிலோ சிகப்பு மற்றும் வௌ்ளை பச்சை அரிசி சம்பாவுக்கான அதிகபட்ச விற்பனை விலை 94 ரூபாவாகவும் வௌ்ளை / சிகப்பு சம்பாவுக்கான அதிகபட்ச விற்பனை விலை 94 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், நாட்டரிசி ஒரு கிலோ 92 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வௌ்ளை /சிகப்பு பச்சை அரிசி ஒரு கிலோவின் அதிகபட்ச விற்பனை விலை 89 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.ad.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
சுவடிக்கூடம்View All