Puttalam Online
regional-news

ஜனாஸா அறிவித்தல் – தாஜுதீன் நூர் நஹர் வபாத்தானார்

  • 7 November 2020
  • 411 views

மெளலாமக்காம் பள்ளி மஹல்லா மஸ்ஜித் வீதியை சேர்ந்த தாஜுதீன் நூர் நஹர் வபாத்தானார்.

இன்னாலில்லாஹி வ-இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னார் மர்ஹூம் செய்னுதீன் மரிக்கார் அவர்களின் அன்பு மனைவியும், மர்ஹூம்களான செய்யது முஹம்மது, மெளலவி செய்யது சாஹுல் ஹமீத், செய்யது சாலிஹு, இஸ்மாயில் ஹாஜியார் ஆகியோரின் சகோதரியும், சாரா உம்மா, அப்துல் ஹாதி, ஆசிரியர் அப்துல் நாஸிர், ஆகியோரின் அன்பு தாயாரும், மர்ஹூம் அஜிருத்தீன் (ஆசிரியர்), லரிபா, ஹில்மியா (கண்டக்குளி), ஆகியோரின் மாமியும், முஹம்மது அஷ்பாக், ஹஸ்மத் சபீஹா, ஆசிரியை ஹஸ்னின் சர்ஜானா, முஹம்மது அத்னான் ஆகியோரின் உம்மம்மாவும், முஹம்மது உஸாமா, பாத்திமா ஸஹ்ரா, பாத்திமா மதீஹா, ஆகியோரின் வாப்பம்மாவும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா தொழுகை வீட்டில் தொழுவிக்கப்பட்டு, இன்று மாலை வெட்டுக்குளம் மக்பராவில் நல்லடக்கம் நல்லடக்கம் செய்யப்பட்டது என்பதை இத்தால் அறிவிக்கப்படுகிறது.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
சுவடிக்கூடம்View All