Puttalam Online
regional-news

புத்தளம் நகரிற்கு விஜயம் செய்தார் அமைச்சர் நாமல் ராஜபக்ஸ

  • 10 November 2020
  • 532 views

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் கௌரவ நாமல் ராஜபக்ஸ புத்தளம் நகரிற்கு இன்று (10/11/2020) விஜயம் செய்தார்.

இதன்போது கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் தேசிய வேலைத் திட்டம் என்ற தலைப்பின் கீழ் புத்தளம் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில் மாகாண சபை , உள்ளுராட்சி சபைகளுக்கான இராஜாங்க அமைச்சர் கௌரவ ‘Rear Admiral’ சரத் வீரசேகர, திறன்மேற்பாட்டு, தொழிற்கல்வி, ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகள் என்பவற்றுக்கான இராஜாங்க அமைச்சர் கௌரவ Dr. சீதா ஆரம்பபொல Arambepola மற்றும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டிருந்தனர்.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
சுவடிக்கூடம்View All