Puttalam Online
regional-news

முதியோர் சங்க உறுப்பினர்களுக்கு முகக்கவசம் வழங்கி வைப்பு

  • 15 November 2020
  • 160 views

(Rizvi Hussain)
 .
காலத்திற்கு ஏற்ற தேவையான சேவைகளை செய்து வரும் பெரியகுடியிருப்பு முதியோர் சங்கத்தினால் முகக்கவசம் (Mask) வழங்கும் சேவை இன்று (15/11/2020) ஆரம்பிக்கப்பட்டது.
 .
தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமது சங்க உறுப்பினர்களை பாதுகாக்கும் முகமாகவும், முகக்கவசம் (Mask) அணிவதன் அவசியத்தை வலியுறுத்தும் முகமாகவும் தமது சங்க நிதியின் மூலம் சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் முகக்கவசம் (Mask) வழங்கி வைக்கப்பட்டது.
 .
தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக சுகாதார வழிமுறைகளை பின்பற்றி சங்க உறுப்பினர்களின் வீடுகளுக்கே சென்று மேற்படி முகக்கவசம் வழங்கி வைக்கப்பட்டது.
 .
இன்றைய ஆரம்ப நிகழ்வில் கல்பிட்டி பெரியகுடியிருப்பு முதியோர் சங்கத்தின் தலைவர் M.H.H.ஹம்ஸா அவர்கள், சங்கத்தின் செயலாளர்M.N.M.அபுல் ஹஸன் (சியாத்) அவர்கள் மற்றும் சங்கத்தின் தனாதிகாரியாக தனது சிறப்பான சேவையாற்றி வரும் ஓய்வு பெற்றும் ஓய்வு பெறாத ஆசிரியர் S.M.S.ஆப்தீன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
 .
WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
சுவடிக்கூடம்View All