Puttalam Online
regional-news

புத்தளம் பிரதேச செயலகத்தில் டிஜிட்டல் பதிவு அறிமுகம்

  • 19 November 2020
  • 166 views

(Divisional Secretariat Puttalam)
.
கோவிட் 19 தொற்று காரணமாக ஏற்பட்டிருக்கக்கூடிய நிலைமையில், பாதுகாப்பு நடவடிக்கையாக Stay Safe Srilanka ஆன்லைன் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் அலுவலகத்திற்கு வருகை தரக்கூடிய சேவை பெறுனர்களை பதிவு செய்யும் புதிய டிஜிட்டல் முறையிலான அனுபவத்தை புத்தளம் பிரதேச செயலகத்திற்கு வருகை தரக்கூடியவர்களுக்கு பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகிறது
.
இங்கு சேவை பெறுனர்களாகிய நீங்கள் stay safe சேவையினை பெற்றுக் கொள்ள பதிவு செய்தல் அவசியம் என்பதுடன் இதற்காக QR Code அல்லது SMS ஆகிய முறைகளை பயன்படுத்த முடியும்.
.
இணையத்தளம் மூலம் பதிவு செய்தல்
https://www.staysafe.gov.lk என்ற இணையதளத்திற்கு உள்நுழையவும்.
.
SMS முறை
இதுவரை நீங்கள் stay safeல் பதிவு செய்திராவிடின், SS இடைவெளி REG இடைவெளி உங்களது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை குறித்து 1919 ற்கு SMS செய்ய வேண்டும்.
.
எமது அலுவலகத்திற்கு உள்நுழையும் போது பின்வரும் முறையில் உங்கள் வரவை பதிவு செய்ய முடியும். SS இடைவெளி 19879 என்ற எண்ணை 1919 ற்கு SMS செய்யவும். வெளிச் செல்லும் போது மேல் குறிப்பிட்ட வாறு 1919ற்கு SMS செய்ய வேண்டும்.
.
QR Code முறை
எமது அலுவலகத்தில் உள்ள QR குறியீட்டினை உங்களது கையடக்க தொலைபேசி மூலம் scan செய்து, பின்னர் அதில் கேட்கப்படும் தகவல்களை வழங்க வேண்டும். வெளிச் செல்லும் போது மீண்டும் QR குறியீட்டை scan செய்ய வேண்டும். QR scanner தரவிறக்கம் செய்வதற்காக
.
இந்தச் சேவையை பெற்றுக் கொள்ள எந்தவொரு தொலைபேசி வலையமைப்பின் ஊடாகவும் கட்டணங்கள் அறவிடப்பட மாட்டாது.
.
WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
சுவடிக்கூடம்View All