Puttalam Online
regional-news

ஆசிய-பசிபிக் வலய செயலமர்வில் பங்கேற்றார் நகர முதல்வர்

  • 24 November 2020
  • 215 views

நிலையான அபிவிருத்திக்கான அடைவுகள் எனும் தொனிப்பொருளில் ஆசிய-பசிபிக் வலய நாடுகளின் மேயர்கள் பங்குபற்றிய செயலமர்வு இன்று (24/11/2020) zoom தொழில்நுட்பத்தின் ஊடாக இடம் பெற்றது.
.
ஐக்கிய நாடுகள் சபையின் அனுசரணையில் இயங்கும் UNESCAP, UNHABITAT, UNU-IAS, APRU, UCLG-ASPAC, IGES மற்றும் NUA ஆகிய நிறுவனங்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இச் செயலமர்வில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி புத்தளம் நகர பிதா கே.ஏ. பாயிஸ் அவர்கள் கலந்து கொண்டார்.
.
இதன்போது நிலையான நகர்புற வளர்ச்சியைத் திட்டமிடுதல், நிர்வகித்தல் மற்றும் நிதி மூலங்களை இனங்காணல் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது. இதில் சுமார் 41 உலக நாடுகளின் மேயர்கள் கலந்து கொண்டதோடு, இதன் இரண்டாவது செயலமர்வு எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
.
WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All