iMedia வின் “ஆஹா அந்தக்குரல்” பரிசுப்போட்டி – Season -01 பிரம்மாண்ட குரல் தேர்வுகான விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய இறுதி திகதி இம்மாதம் 30ம் திகதியுடன் (30/11/2020) முடிவடையவுள்ளது.
எமக்கு மத்தியில், எமது பிரதேசத்தில், இலைமறை பழங்களாக, திரைமறை திறமைகளாக இனம் காணப்படாதிருக்கும் இளம் தலைமுறையை இனம்காண்பதும், அவர்களின் இனிய குரலை, எழுத்தாற்றலை,
இலட்சிய கீதங்களுக்கூடாக சமூகத்துக்கு அறிமுகம் செய்வதும் இந்த நிகழ்ச்சியின் பிரதான இலக்குகளாகும்.
உங்களால் சிறப்பாக பாடமுடியுமானால் அல்லது உங்களால் சிறந்தமுறையில் பாடல்களை எழுதமுடியுமானால் அல்லது உங்களுக்குத்தெரிந்த எவரோ ஒருவர் ஆற்றல் இருந்தும் அறியப்படாமல் இருப்பாரானால் இதனை உங்களுக்கான சந்தர்ப்பமாக பயன்படுத்திக்கொள்ள முடியும்.
பெயர், வயது, முகவரி, தொலைபேசி இலக்க விபரங்களோடு,
SMS அல்லது WhatsApp ஊடாக 0771746699 என்ற இலக்கத்துக்கு உங்கள் விண்ணப்பங்களை அனுப்பிவையுங்கள்.
WAK