Puttalam Online
uncategorized

புத்தளத்தில் சேவா முத்திரைகளைப் பதித்த பதின்மர்

  • 27 December 2020
  • 533 views

A.M.M. ஹனிபா ஆசிரியரின் குறிப்புக்களில் இருந்து … 

23.09.1991 திங்கள் அன்று புத்தளம் நகரில் இடம்பெற்ற மீலாத் விழாவின்போது பல்துறைகளிலும் தமது சேவா முத்திரைகளைப் பதித்த பதின்மர் கெளரவிக்கப்பட்டனர். அவர்களின் விபரம் வருமாறு:

1. “ஆசிரிய மாமணி”  –  அல்ஹாஜ் ஏ.கே. அபூஹனிபா – (07.04.1917 – 10.01.2010)

    இவர் புத்தளம் நகரில் முதலாவது பயிடப்பட்ட ஆசிரியரும் தரம்பெற்ற அதிபருமாவார்.

  http://puttalamonline.com/2020-09-21/puttalam-star-person/143481/

 

2. “வன ராஜா”  உமர் ஜெஹ்பர் – (1995ல் அவருக்கு வயது 85)

இவர் தனது வாலிப வயதில் புலியுடன் போரிட்டு வெற்றிபெற்றவராவார்.

.

3. “இலட்சியத் தந்தை”  இப்ராஹிம் – (02.04.1920 – 10.04.1998)

     இவர் வறுமை நிலையிலும், தனது மூன்று புதல்விகளையும் வைத்தியர்களாக்கினார். M.I.S. லத்தீபா (ரெஜினாஸ்), M.I.S. பத்ருன்னிஸா (இங்கிலாந்து), M.I.S. திபாயா ஆகியோரே அவர்களாவர்.

 

4. “வித்தகப் பேராசான்”  A.M.I. நெய்னா மரைக்கார் – (26.07.1922 – 26.09.1999)

     இவர் கல்பிட்டி அல் அக்ஸா, புத்தளம் ஸாஹிறா போன்ற பாடசாலைகளில் அதிபராகக் கடமையாற்றியவர். புத்தளத்தில் ஆரம்பகால ஆசிரியர்களில்
ஒருவர். சிறந்த தமிழ் அறிஞர்.

 

5. “வைத்திய சிகாமணி”  – முஹம்மது ஹுசைன்  (சின்னப் பரியாரி) (20.09.1920 – 28.02.1992) 

   இவர் புத்தளத்தில் ஆயுர்வேத வைத்தியம் செய்த குடும்பத்தின் ஆறாவது தலைமுறையாவார்.

 

6. “பல்கலை வித்தகர்”, “கலை விற்பன்னர்”  – அல்ஹாஜ் ஏ.என்.எம். ஷாஜஹான் (05.10.1928 – 25.12.2004)

    ‘புத்தளம் வரலாறும் மரபுகளும்’ உட்பட பல நூல்களையும் கட்டுரைகளையும் எழுதியவர். வானொலிப் பாடகர், ஓவியர்

.

7. சமூக சேவாமணி A.H. அப்பாஸ் G.S.    (Deth 1996)

இவர் புத்தளத்தில் விதானை பரம்பரையின் ஏழாவது விதானையார் ஆவார். ஜவாத் மரைக்கார் அவர்களின் மனைவியின் தகப்பனார்.

.

8. “நலன்புரிச் செம்மல்” N. அப்பாஸ் மரைக்கார் (கிளாக் அப்பாஸ்)  –  (10.03.1914 – 11.02.1994) 

1930 முதல் புத்தளத்தில் பல்வேறு சமூகப் பணிகளையும் புரிந்த முஸ்லிம் அபிவிருத்தி சங்க தாபகர்.

 http://puttalamonline.com/2020-10-05/puttalam-uncategorized/143747/

 

 

9. “ஆசிரிய சிகாமணி”  A.M.M. ஹனிபா  (21.9.1925 – 8.10.2001)
புத்தளம் நகரில் அஹதியா, இஸ்லாமிய முன்னணி இயக்கம் (I.F.M.)  என்பனவற்றின் தாபகர்.

 http://puttalamonline.com/2017-04-15/puttalam-star-person/118205/

.

10. “பல்கலைப் பேராசான்”  மெளலவி A.R.M. புவாத்   –  ( 27.12.1929 – 30.06.1994)
அரபு பாடத்துக்கான வட்டாரக் கல்வி அதிகாரி (C.E.O.)

(Z.A. Zanhir)

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All